First lessons of my 'Nala Bhagam' from my mother that has made me a 'decent' cook today :-)
Sunday, November 30, 2008
Sunday, November 16, 2008
கார்கில்!
இந்த வாரம் பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருக்கும் பொழுது கையில் தட்டுப்பட்டது கார்கில் வீரர்களை ஊக்கப்படுத்த நான் எழுதிய கடிதம். 1999ல் கார்கில் போர் நடந்துகொண்டிருக்கும் பொழுது பள்ளியில் ஒரு கடிதப்போட்டி நடத்தினர் - 'கார்கில் வீரர்களை ஊக்கப்படுத்தும் கவிதை எழுதும் போட்டி'. இதோ நான் எழுதிய கடிதம் - இல்லை... இல்லை...கவிதை!
அன்பை விரும்பும் இந்திய மண்ணில்
ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானை
இன்னுயிர் ஈந்து தடுத்து வரும்
ஈகை நிறைந்த வீரர்காள்!
உங்களுக்குண்டெங்கள் ஆதரவு!
ஊடுருவும் நரிகளை ஒழிப்பீர்கள்!
எல்லையில் போராடும் உங்களுக்கு
ஏனைய உதவிகள் செய்திடுவோம்.
ஐயம் இல்லை உங்கள் மேல்
ஒளியாய்த் திகழும் திலகங்களே!
ஓங்கும் நமக்கு வெற்றிகளே!
ஔடதமாகும் அவ்வெற்றி!
அஃதே உங்களுக்கெம் போற்றி!
கார்கில் வெற்றியும் இந்த கடிதமும் அதற்குக் கிடைத்த முதல் பரிசும் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கின்றது!
அன்பை விரும்பும் இந்திய மண்ணில்
ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானை
இன்னுயிர் ஈந்து தடுத்து வரும்
ஈகை நிறைந்த வீரர்காள்!
உங்களுக்குண்டெங்கள் ஆதரவு!
ஊடுருவும் நரிகளை ஒழிப்பீர்கள்!
எல்லையில் போராடும் உங்களுக்கு
ஏனைய உதவிகள் செய்திடுவோம்.
ஐயம் இல்லை உங்கள் மேல்
ஒளியாய்த் திகழும் திலகங்களே!
ஓங்கும் நமக்கு வெற்றிகளே!
ஔடதமாகும் அவ்வெற்றி!
அஃதே உங்களுக்கெம் போற்றி!
கார்கில் வெற்றியும் இந்த கடிதமும் அதற்குக் கிடைத்த முதல் பரிசும் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கின்றது!
Subscribe to:
Posts (Atom)