Sunday, November 16, 2008

கார்கில்!

இந்த வாரம் பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருக்கும் பொழுது கையில் தட்டுப்பட்டது கார்கில் வீரர்களை ஊக்கப்படுத்த நான் எழுதிய கடிதம். 1999ல் கார்கில் போர் நடந்துகொண்டிருக்கும் பொழுது பள்ளியில் ஒரு கடிதப்போட்டி நடத்தினர் - 'கார்கில் வீரர்களை ஊக்கப்படுத்தும் கவிதை எழுதும் போட்டி'. இதோ நான் எழுதிய கடிதம் - இல்லை... இல்லை...கவிதை!

ன்பை விரும்பும் இந்திய மண்ணில்
திக்கம் செலுத்தும் பாகிஸ்தானை
ன்னுயிர் ஈந்து தடுத்து வரும்
கை நிறைந்த வீரர்காள்!
ங்களுக்குண்டெங்கள் ஆதரவு!
டுருவும் நரிகளை ஒழிப்பீர்கள்!
ல்லையில் போராடும் உங்களுக்கு
னைய உதவிகள் செய்திடுவோம்.
யம் இல்லை உங்கள் மேல்
ளியாய்த் திகழும் திலகங்களே!
ங்கும் நமக்கு வெற்றிகளே!
டதமாகும் அவ்வெற்றி!
தே உங்களுக்கெம் போற்றி!

கார்கில் வெற்றியும் இந்த கடிதமும் அதற்குக் கிடைத்த முதல் பரிசும் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கின்றது!

No comments: