'பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்டான்!' - எங்கப்பா அடிக்கடி சொல்லற பழமொழி இது. மத்தவா எப்படியோன்னு தெரியாது; ஆனா, என்னைப் பொருத்தவரைக்கும் இது கொஞ்சம் - இல்லை ரொம்பவே உண்மை. :) ஆனா, சுஜாதா, பல மரம் கண்டு எல்லாத்தையும் வெட்டிய பேரறிவுடைய கலைஞன், பொறியாளர், எழுத்தாளர் - இன்னும் எத்தனை எத்தனை முகங்களோ நம்மை விட்டுப் பிரிந்த இந்த ரங்கராஜனுக்கு. ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்' படித்தபோது வியந்திருக்கிறேன் இவரைப் பற்றி. எப்படி ஒரு மனிதனால் கடவுளையும் கணிப்பொறியையும் ஒரே நேரத்தில் இப்படி அலசி ஆராய முடிகின்றதென்று. நாமெல்லாம் நமது வாக்குரிமையைச் செலுத்தும் மின்னணு வாக்கு இயந்திரம் இந்த விஞ்ஞானி 'பாரத் எலெக்ட்ரானிக்ஸ்'ல் விஞ்ஞானியாக இருந்தபோது கண்டுபிடித்ததுதான். சாதாரண மக்களையும் தனது கதைகளிலும் நாவல்களிலும் அறிவியலைப் புகுத்திப் புதிய உலகத்தைக் காணச் செய்தவர். முதல்வன் முதல் சிவாஜி மற்றும் இன்றைய தசாவதாரம் வரைக்கும் தனது வசனங்களால் 'சும்மா அதிர வைத்த' சுஜாதாவின் ஆன்மா அமைதியடைய வேண்டுவோம் இறைவனை.
No comments:
Post a Comment